Publish Date: Thu, 11 Aug 2022 (14:17 IST)
Updated Date: Thu, 11 Aug 2022 (14:20 IST)
மூன்று அல்லது நான்கு அத்திப் பழத்தை எடுத்து, இரவில் அதனை சிறிதளவு நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் இந்த நீருடன் சேர்த்து ஊறவைத்த அத்திப்பழத்தையும் இரண்டு முறை உட்கொள்ளலாம்.
மாதுளம் பழத்தின் தோலை எடுத்து, நீரில் கொதிக்க வைத்து, இந்த நீரை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வருவதால் நல்ல பலன் கிடைக்கும். இது வெறுமனே மூலத்தை மட்டுமல்லாது வயிறு தொடர்பான அத்தனை பிரச்னைகளையும் சரிசெய்யும். மலச்சிக்கலைப் போக்கும். மாதவிலக்கின் போது உண்டாகும் வலியையும் தீர்க்கும்.
மூல நோயால் உண்டாகும் வலியைக் குறைக்க, மோரில் கல் உப்பு சேர்த்து, அதில் சிறிதளவு இஞ்சி, மிளகு தூள் சேர்த்து இரண்டு முறை பருகி வாருங்கள். காய்ந்த மாங்காய் கொட்டைகளை எடுத்து தூளாக்கிக் கொள்ளவும். இந்த பவுடர் இரண்டு ஸ்பூன் எடுத்து சிறிதளவு தேனில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வரவும்.
மூல நோயால் ஏற்படும் இரத்தப் போக்கை குறைக்க, அரை கப் ஆட்டுப் பாலுடன், ஒரு ஸ்பூன் தூள் செய்த கடுகை சேர்த்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து பருகவும். காலையில் வெறும் வயிற்றில் இதனைப பருகுவதால் இரத்தப்போக்கில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
ஒரு ஸ்பூன் இஞ்சி, மற்றும் எலுமிச்சை சாற்றுடன், சிறிதளவு புதினா இல்லை மற்றும் தேன் சேர்த்து பருகவும். இதனை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகலாம்.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு நாவல் பழத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ளலாம். மூல நோயால் உண்டாகும் வலியைக் குறைக்க ஒரு கனிந்த வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து அதில் ஒரு கப் பால் சேர்த்து பருகலாம். இதனை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை பின்பற்றலாம்.