Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதை தடுக்கும் கடலை எண்ணெய் !!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (16:51 IST)
கடலை எண்ணெய்யை கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகின்றன.


கடலை எண்ணெய்க்கு இயற்கையாகவே உடலில் கலக்கும் தீங்கான பொருட்களை எதிர்த்து செயலாற்றும் சக்தி அதிகம் உள்ளது. எனவே உடலில் இருக்கும் திசுக்கள் மற்றும் செல்களில் வளரக்கூடிய புற்று நோயை எதிர்த்து கடலை எண்ணெய் சிறப்பாக செயல்புரிகிறது.

இந்த எண்ணெய்யில் இருக்கும் வைட்டமின் இ சத்து இருதயத்தை சிறப்பாக செயல்பட செய்கிறது. வயதானவர்கள் கடலை எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவதால் அவர்களின் மூளை செல்கள் புத்துணர்ச்சி பெரும். நரம்புகள் பாதிப்பு, ஞாபக மறதி போன்ற குறைபாடுகளும் நீங்கும்.

சிறிதளவு கடலை எண்ணெய்யை எடுத்து வலி ஏற்படும் மூட்டு பகுதிகளில் நன்கு தடவி, சிறிது நேரம் மெதுவாக பிடித்து விட்டால் சிறிது நேரத்திலேயே மூட்டு வலி நீங்கும்.

கடலை எண்ணெய் சரியான அளவில் பயன்படுத்தி செய்யட்டும் உணவுகளை அடிக்கடி சாப்பிடும் நபர்களுக்கு அவர்களின் சருமத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, இளமை தோற்றம் மேலோங்கும்.

கடலை எண்ணெய் சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் நன்கு தேய்த்து கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும்.

அவ்வப்போது கடலை எண்ணெய்யை உணவில் பயன்படுத்திக்கொள்ளும் போது உடலின் போலிக் அமிலம் தேவை பூர்த்தியாகி ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments