Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை மீது கேஷ்பேக் பெறுவது எப்படி?

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (11:17 IST)
எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் இணைந்து கிரெடிட் கார்ட் வழங்குகிறது. இந்த கிரெடிட் கார்ட் மூலம் பெட்ரோல் போடும் போது கேஷ்பேக் மற்றும் சலுகை புள்ளிகள் வழங்கப்படும் என செய்தி வெளியானது. 
 
# இது எப்படி செய்ல்முறை படுத்தப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். சிட்டி பேங்க் இந்தியன் ஆயில் கார்டில் 150 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பும் போது 4 புள்ளிகள் கிடைக்கும். இந்த ஒரு புள்ளி ஒரு ரூபாய்க்கு சமம். 
 
# ஐசிஐசிஐ வங்கி 2.5 சதவீதம் கேஷ் பேக் வழங்குகிறது. அதே நேரத்தில் ஒரு மாதத்துக்கு ரூ.100-க்கு மேல் கேஷ் பேக் பெற முடியாது. குறைந்தபட்சம் ரூ.500-க்கு பெட்ரோல் போட வேண்டும். 
 
# ஹெச்பிசிஎல் கோரல் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுக்கு 100 ரூபாய் எரிபொருளுக்கு 6 புள்ளிகளும், எரிபொருள் அல்லாத மற்ற செலவுகளுக்கு 2 புள்ளிகளும் வழங்கப்படும். நான்கு புள்ளிகளுக்கு ஒரு ரூபாய் வழங்கப்படும். 
 
# பிபிசிஎல் எஸ்பிஐ கார்டு பயன்படுத்துவதன் மூலம் ரூ.100-க்கு 13 புள்ளிகள் வழங்கப்படும். 4 புள்ளிகள் என்பது ஒரு ரூபாய். எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ கார்டுகளில் ரூ.4000-க்கு மேல் எரிபொருள் வாங்கும்போது இந்த தள்ளுபடி செல்லாது. 
 
# ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி, சூப்பர் வேல்யூ டைட்டானியம் கார்டு  5% கேஷ் பேக் வழங்குகிறது. ஆனால் குறைந்தபட்சம் ரூ.750-க்கு எரிபொருள் நிரப்ப வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் ரூ.500 கோடி செலவில் 10 மாடி பஸ் நிலையம்.. ஆந்திர அரசு அறிவிப்பு..!

2026 தேர்தலில் தனித்து போட்டி.. சீமான் அறிவிப்பு.. 4 அணிகள் போட்டியா?

மீண்டும் ரூ.70,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.280 உயர்வு..!

முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்.. அமெரிக்க மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments