Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்பானிக்கு காசு ஒரு மேட்டரா... 2 மாதத்திற்கு ஜியோ ஜிகா ஃபைபர் இலவசம்!!

Advertiesment
ரிலையன்ஸ் ஜியோ
, புதன், 4 செப்டம்பர் 2019 (10:34 IST)
நாளை வணிக ரீதியாக அறிமுகமாக உள்ள ஜியோ ஜிகா ஃபைபர் சேவை 2 மாதங்களுக்கு இலவசம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
மொபைல் இணைய சேவையில் குறுகிய காலத்தில் இந்தியா முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்த நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ. இந்த நிறுவனம் சமீபத்தில் ஜியோ ஜிகா ஃபைபர் என்ற புதிய திட்டத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. 
 
ஜியோ ஜிகா ஃபைபர் நாளை (செப்.5) முதல் வணிக ரீதியாக செயல்பாட்டிற்கு வருகிறது. லேண்ட்லைன் சேவையுடன் இணைய வசதியும் கூடிய ஒரு செட் டாப் பாக்ஸும் ஜியோ ஜிகா ஃபைபர் சேவையில் அடக்கம். 
ரிலையன்ஸ் ஜியோ
இந்நிலையில், இந்த சேவை இரண்டு மாதங்களுக்கு இலவசம் என்ர தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ஜியோவின் ப்ரிவியூ கஸ்டமர்களுக்கு இந்த சேவை 2 மாதங்களுக்கு இலவசமாம். அதாவது, கடந்த ஆண்டு ரிலையன்ஸ் பொது கூட்டத்தில், ஜிகா ஃபைபர் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டது. 
 
அதன்படி, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ரூ.2500 பாதுகாப்பு வைப்பு நிதியின் கீழ் சோதனை செய்யப்பட்டு வந்தது. அந்த சோதனையின் கீழ் உட்பட்ட வாடிக்கையாளர்கள் ப்ரிவியூ கஸ்டமர்கள், தற்போது இவர்களுக்குதான் 2 மாதங்களுக்கு ஜிகா ஃபைபர் இலவசம். 
ரிலையன்ஸ் ஜியோ
அதோடு, மற்ற வாடிக்கையாளர்கள் வருடாந்திர ஜியோ ஃபாரெவர் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் ஜியோ ஜிகா ஃபைபர் வெல்கம் ஆஃபர் என்ற பெயரில் 4 கே செட்-டாப்-பாக்ஸுடன் இலவச எச்டி அல்லது 4 கே டிவி ஒன்றை பெறலாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாரி பாட்டர் புத்தகங்களுக்கு தடை..