Publish Date: Sat, 23 May 2020 (13:08 IST)
Updated Date: Sat, 23 May 2020 (13:12 IST)
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனினை சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் ஆன நிலையில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. எதிர்ப்பார்த்ததை விட குறைவான விலையியேலே ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
ஆம், மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ராயல் புளூ மற்றும் ஆர்க்டிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மே 29 ஆம் தேதி துவங்குகிறது.
மோட்டோ ஜி8 பவர் லைட் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 எல்சிடி ஸ்கிரீன்
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
# IMG பவர் விஆர் GE8320 GPU, ஆண்ட்ராய்டு 9
# 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி eMMC 5.1 மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
# 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
# 2 எம்பி மேக்ரோ சென்சார்
# 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4, 1.75µm பிக்சல்
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்