பேடிஎம் நிறுவனம் விழாக்கால விற்பனைக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் கேஷ்பேக் ஆடருக்கு மட்டும் ரூ.501 கோடி ஒதுக்கியுள்ளதாம்.
ஆன்லைன் வர்த்தக நிறுவனக்களான அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் கிரேட் இண்டியன் சேல், பிக் பில்லியன் டேஸ் உள்ளிட்ட விற்பனை உத்திகளை கையாண்டு வாடிக்கையாலர்களை கவர்கின்றன.
அந்த வகையில் பேடிஎம் நிறுவனமும் மேரா கேஷ் பேக் சேல் என்ற விற்பனையை திட்டத்தை துவங்கியுள்ளது. இது வரும் 15 ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த விற்பனைக்காக ரூ.501 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த குறிப்பிட்ட நாட்களில் வரும் விறபனைக்கு கேஷ்பேக் வழங்க இந்ஹ பணம் பதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடந்த வருடம் செப்டம்பரில் பேடிஎம் ரூ.701 கோடிக்கு கேஷ்பேக் விற்பனை சலுகையை வழங்கியது. இந்த முறை அது குறைந்துள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டியது.