ஆர்காம் சொத்துக்களை ஜியோவிற்கு விற்பதில் சிக்கல்?

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (16:40 IST)
அனில் அம்பானியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (ஆர் காம்) நிதி நெருக்கடியில் உள்ளதால், அதன் சில சொத்துகளை விற்று கடனை அடைக்க திட்டமிட்டது. ஆர்காம் நிறுவனத்தின் சொத்துக்களை ஜியோ நிறுவனம் வாங்குவதாக இருந்தது. 
 
கடந்த ஆண்டு டிசம்பர் கடன் சுமையை ரூ.39,000 கோடியாக குறைக்கும் பொருட்டு ஆர் காம் நிறுவனத்தின் வயர்லெஸ் ஸ்பெக்ட்ரம், டவர்கள், ஃபைபர்கள் மற்றும் எம்சிஎன் சொத்துகளை ஜியோ நிறுவனத்துக்கு விற்க முடிவு எடுக்கப்பட்டது.
 
ஆனால், தற்போது இதில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். உச்ச நிதிமன்றம் தங்களது இறுதி உத்தரவு வரும்வரை காத்திருக்க வேண்டும் அதற்கு முன்னர் சொத்துக்களை கைமாற்றக்கூடாது என குறிப்பிட்டுள்ளனராம். 
 
இதற்கான காரணம், ஆர்காம் நிறுவனம் சுவீடனைச் சேர்ந்த தொலைதொடர்பு உபகரண தயாரிப்பு நிறுவனமான எரிக்ஸன் நிறுவனத்திற்கு ரூ.1,012 கோடி பாக்கி உள்ளதால், எரிக்ஸன் தனது சொத்துகளை அனுமதியின்றி விற்ககூடாது என வழக்கு தொடர்ந்தது. 
 
இதனை ஏற்று உச்ச நிதிமன்றம் ஆர்காம் சொத்துக்களை அனுமதியின்றி ஜியோ நிறுவனத்திற்கு விற்ககூடாது என குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் வீடு கட்டாமலேயே ரூ.20 லட்சம் போலியாக பில் பாஸ் செய்த அதிகாரிகள்.. நம்ப முடியாத மோசடி!

ஹஜ் யாத்திரை 2027: விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு.. தேர்வு செய்யப்படுபவர்கள் எவ்வளவு பணம் கட்ட வேண்டும்?

கட்டிய சில வாரங்களில் புதிய பேருந்து நிலைய நீர் கசிவு.. அரியலூர் ஒப்பந்ததாரருக்கு ரூ.10 லட்சம் அபராதம்! கலெக்டர் அதிரடி

சினிமா ஸ்டைல்' சட்டமன்றம்: இதை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும்: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து!

கிரேன் வைத்து மின்வாரிய பொருட்கள் திருட்டு.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. மின்வெட்டு இதனால் தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments