சியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட்போன் குறுகிய காலத்தில் 4 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சியோமி நிறுவனம் பட்ஜெட் விலையில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தாலும், இதுவரையில் ரெட்மியின் பதிப்புகளில் இந்த ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்தான் குறைந்த விலையில், அதிக சிறப்பம்சங்கள் கொண்டுள்ளதாக இருந்தது.
எனவே, வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை அதிக அளவில் வாங்கியுள்ளனர். 9,999 ரூபாய்க்கு ரெட்மி நோட் 7, 4ஜிபி ராம் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 13,999 ரூபாய்க்கு, 6ஜிபி ராம் 16,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதனாலேயே உலகம் முழுவதும் 4 மில்லியன் ரெட்மி நோட் 7 சீரிஸ் போன்கள் விற்று தீர்ந்துள்ளது. இது சியோமிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும். ஆன்லைனில் மட்டும் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட ஒரு நாள் மட்டுமே விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.