Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாட்ஸ் ஆப் அப்டேட்: ஷாக் கொடுக்கும் அந்த 4... விவரம் உள்ளே!

Advertiesment
வாட்ஸ் ஆப்
, திங்கள், 21 ஜனவரி 2019 (20:48 IST)
வாட்ஸ் ஆப் தற்போது அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக உள்ளது. அந்நிறுவனமும் பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. 
 
அந்த அவகியில் அடுத்து நான்கு புதிய அப்டேட்டுகளை வழங முடிவு செய்துள்ளது. அந்த நான்கு அப்டேட்டுகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு,
 
பிங்கர் பிரிண்ட் லாக்:
வாட்ஸ் ஆப் சாட்களை பாதுகாக்க இந்த பிங்கர்பிரிண்ட் லாக் சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. வாட்ஸ் ஆப்பின் அடுத்த 2.19.3 அப்டேட்டில் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்படும். 
வாட்ஸ் ஆப்
ஆடியோ பிக்கர்:
பயனர்கள் தங்களின் தொடர்புகளுக்கு ஆடியோ அனுப்புவதற்கு முன்பு ஆடியோ பைல்களை பிளே செய்து செக் செய்யும் வசதி வாட்ஸ் ஆப் வெர்ஷன் 2.19.1 வழங்கப்படும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 30 ஆடியோ பைல்கள் அனுப்ப முடியும்.
 
ஸ்டிக்கர் இன்டெகிரஷன்:
ஸ்டிக்கர் இன்டெகிரஷன் மூலம் வாட்ஸ் ஆப் சாட்களில் ஸ்டிக்கர்களைப் பகிர மூன்றாம் தரப்பு பயன்பாட்டை பயன்படுத்த முடியும். முதல் முறையாக புதிய ஜிபோர்டு (GBoard) சேவையும் அறிமுகம் செய்யப்படுகிறது.
வாட்ஸ் ஆப்
3டி டச் ஆக்ஷன் ஸ்டேட்டஸ்:
இந்த அம்சம் விரைவில் ஐபோனில் மட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 3டி டச் மூலம் ஸ்டேட்டஸ்களின் நிலைமையை பார்த்துக் கொள்ளலாம். 
 
மிக விரைவில் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இந்த அப்டேட் கிடைக்குமென்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோயில் திருவிழாவுக்கு தயாராகும் தடபுடல் ஆட்டு பிரியாணி...