Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?.. வாங்க பார்ப்போம்!..

Advertiesment
helmet
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களை ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்கிற விதிமுறை இருக்கிறது. தற்போது சின்ன சின்ன நகரங்களில் கூட பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள்.அதேநேரம் ஹெல்மெட் அணிவது என்பது பலருக்கும் அசவுகரியமான ஒன்றாகவே இருக்கிறது.. ஏனெனில் ஹெல்மெட்டை இறுக்கமாக அணியும் போது தலையில் வியர்வை தங்கி அதன் காரணமாக முடி கொட்டும் என பலரும் நம்புகிறார்கள்..

ஹெல்மெட்டில் படியும் தூசி, அழுக்கு காரணமாக முடிகளின் வேர்கள் பாதிக்கப்படுவதாகவும் பலரும் நம்புகிறார்கள்.இதற்கு மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்:

ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டும் என்கிற கருத்துக்கு அறிவியல் ரீதியாக ஆதாரமில்லை என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.. அதேநேரம் ஹெல்மெட் அணியும் போது சில சமயம் தலையில் உராய்வு ஏற்படலாம் என்கிறார்கள்.. அதன் காரணமாக வியர்வை தங்கி உச்சந்தலையோ அல்லது முடியின் வேர்களுக்கு அருகில் உள்ள தோல் பகுதியோ கொஞ்சம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஹெல்மட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அதன் உட்புறம் அழுக்கு அல்லது பூஞ்சை வளர்ந்தோ தலை முடி பாதிக்க வாய்ப்பிருக்கிறது..

அதேநேரம் முடி கொட்டுவதற்கு ஹெல்மெட் மட்டுமே காரணம் அல்ல.. தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்வதும், ஹெல்மெட்டின் உட்பகுதியை அடிக்கடி சுத்தம் செய்வதாலும் நாம் இதை தடுக்க முடியும். பொதுவாக உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், மரபியல் காரணங்கள் மற்றும் வாழ்க்கை முறை, பழக்கங்கள் காரணமாகவே முடிகொட்டுதல் வாய்ப்பிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடி கொட்டாமால் இருக்க என்ன செய்யவேண்டும்?.. வாங்க பார்ப்போம்!...