Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பித்தப்பை கற்கள் உருவாகுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

Mahendran
செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (19:28 IST)
பித்தப்பை என்பது கல்லீரல் கீழே இருக்கும் ஒரு சிறிய பை மாதிரியான உறுப்பு. இதில் பித்த நீர் சேமிக்கப்படுகிறது. இந்த பித்த நீரில் உள்ள கொலஸ்ட்ரால், பிலுருபின், மற்றும் பித்த உப்புகள் ஒட்டிக்கொண்டு கற்களாக உருவாகலாம். 
 
பொதுவாக, கொழுப்புச் சேர்க்கை அதிகமான உணவுகளை உட்கொண்டால், பித்த நீர் குடலுக்குச் சென்று செரிமானத்திற்கு உதவுகிறது. இந்தியாவில் சுமார் 4% முதல் 9% மக்களுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது, மேலும் பெண்கள் ஆண்களை விட அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பித்தப்பை கற்களில் பெரும்பாலானவை கொழுப்பால் உருவானவை.
 
இந்தக் கற்களை கரைக்க, மருத்துவரின் ஆலோசனையுடன் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அதனால் தீர்வு கிடைக்கவில்லை என்றால், பித்தப்பையை அகற்ற அறுவை சிகிச்சை செய்யலாம். 
 
இதைத் தவிர்க்க, தினசரி உடற்பயிற்சி செய்தல், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், முழு தானியங்கள் சேர்த்துக் கொள்ளல் முக்கியம். அதிக கொழுப்பு உணவுகள், அதிக எண்ணெய் உணவுகள், விரதம் இருப்பது, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments