Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்தை அழகாக பராமரிக்க உதவும் கற்றாழை ஜெல் !!

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (13:06 IST)
தினமும் இரவு படுக்கும் முன் கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி தடவி, மறுநாள் காலையில் கழுவி வந்தால், விரைவில் கருவளையங்கள் மறையும். முகம் பொலிவோடு காணப்படும்.


தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை நன்கு அரைத்து, முகம் முழுவதும் பூசி கால் மணிநேரம் அல்லது அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை நீங்கி முகம் பொலிவு பெறும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள் மறையும்.

கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் நமது உடலில் நைட்ரிக் ஆக்சைட், சைட்டோகைனின் போன்ற வேதிப்பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் சரியான அளவில் கற்றாழையை உட்கொள்வது அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கற்றாழையில் வைட்டமின் ஈ மற்றும் சி அதிகம் உள்ளது. மேலும் கற்றாழை ஜெல்லானது சருமத்தில் கொலாஜன் செல் உற்பத்தியை அதிகரிக்கும்.

கற்றாழை ஜெல்லுடன் பால் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து அதில் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் இளமை தோற்றத்துடன் காணப்படும்.

கற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல்நலத்தை மேம்படுத்துகிறது.

கற்றாழை ஜெல்லை முகத்தில் கருமையாக இருக்கும் பகுதியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments