Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் !!

Webdunia
ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்தால் முதுமை அடைவது தடுக்கப்படும். தினமும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், நிச்சயம் முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு இருக்கும்.

ஐஸ் கட்டிகளை ஒரு சுத்தமான துணியில் வைத்து, அதனைக் கொண்டு முகத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். மேலும் இந்த மாதிரி காலையில் குளிக்கும் முன்பும் செய்யலாம். முகத்தை சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவும் முன்பும் செய்யலாம் அல்லது இரவில் படுக்கும் முன்பும் செய்யலாம்.
 
ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வருவதால், சோர்ந்து காணப்படும் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். அதிலும் எப்போதெல்லாம் முகம் சோர்வுடன் இருக்கிறதோ, அப்போது ஐஸ் கட்டிகளைக் கொண்மு முகத்தை மசாஜ் செய்தால், முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
 
ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், சருமத்துளைகளின் அளவு குறையும். இதனால் முகத்தில் பருக்கள் வருவது குறையும். எனவே உங்களுக்கு பருக்கள் அதிகம் வந்தால், ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்யுங்கள். இதனால் விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.
 
சில நேரங்களில் அதிகப்படியான வெயிலினால் சருமமானது எரிச்சலுக்கு உள்ளாவதுடன், காயங்களும் ஏற்படும். அப்படி சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்ய, ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்தால், நல்ல இதம் கிடைக்கும்.
 
சிலருக்கு இளமையிலேயே சருமத்தில் சுருக்கங்கள் இருக்கும். இது முதுமைத் தோற்றத்தைக் கொடுக்கும். எனவே இவற்றைத் தடுக்க ஐஸ் கட்டிகளைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, இளமையான தோற்றத்தை மீண்டும் பெறலாம். ஆனால் எதையும் அளவுக்கு அதிகமாக செய்ய வேண்டாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments