Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களை தரும் வெள்ளரி !!

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (09:22 IST)
வெள்ளரிக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான சக்தியை மேம்படுத்தவும், தீராத மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவுகிறது.

சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் வெள்ளரிக்காயில் நிறைந்திருப்பதால், சரும செல்களை பாதுகாக்கின்றது.
 
வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றினை முகத்தில் தடவி குளிர்ந்த நீரால் கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் முகக் கருமையய் போக்கும்.
 
நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக் காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்தவேண்டும். 
 
முடிவளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர் தரமான சிலிகானும், சல்பரும் முடி வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட் சாறு,  இரு தேக்கரண்டி பசலைக் கீரைச்சாறு, பச்சடிக் கீரைச் சாறு போன்ற வற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.
 
காரட்கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில் தான் தாது உபபுகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்லருக்கு போகாமல் முகத்தை பொலிவாக வைத்து கொள்வது எப்படி? எளிய ஆலோசனைகள்..!

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments