Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பெண்களுக்கான இயற்கை மருத்துவ குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்....!!

பெண்களுக்கான இயற்கை மருத்துவ குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்....!!
பெண்களின் வயிற்று சதை குறைய: சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும்தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்..
 
இரவில் செம்பருத்திப் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டு படுத்து காலையில் எடுப்பதால் மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.பேன் பொடுகு  அகலும்.
 
மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்துப் பூசி வந்தால் கரப்பான் புண்கள் விரைவில் ஆறிவிடும். கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து அந்நீரால் வாய்  கொப்பளித்தால் பல்வலி நீங்கி விடும்.
 
பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் குழந்தை பிறப்பதில் ஏற்படும் குறைபாட்டினை நீக்கும். தவிர பெண்களின் லிபிடோ சக்தியை ஊக்குவிக்கிறது. சோயா பீன்ஸ்சில்  உள்ள சத்துக்கள் பெண்களீன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது.
 
சோயாபீன்ஸ் உயர்தர புரதம் அடங்கியது. இது மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் போன்றவைகளை குறைக்கிறது.
 
தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை மேற்கொள்ளலாம். அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன்  குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.
 
குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெய்யில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும்.  பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பால் அதிகமாக சுரக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் மட்டும் ஏன் இவ்வளவு பாதிப்புகள்? – ஒரு கண்ணோட்டம்!