Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க உதவும் இயற்கை வைத்திய குறிப்புகள்...!!

Webdunia
பெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது. வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

* மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும். பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.
 
* சிறிதளவு சர்க்கரையுடன், எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கலவையாக தயார் செய்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் இருக்கும் ரோமங்கள் மீது தடவி 5 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை  செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம்.
 
* கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும். சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
 
* கஸ்தூரி மஞ்சள்தூள் ,சிறுபயறுத்தூள் இரண்டையும் சம அளவு கலந்து,தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போலாக்கி காலை, இரவு என 2 முறை முகத்தில் தேய்த்து 1/2  மணிநேரம் கழித்து கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வரவும். முடி கொட்டிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இதய பிரச்சனை இருப்பவர்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments