Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் சுலபமாக தீரவேண்டுமா...?

Webdunia
தேங்காய் எண்ணெய் மிக நெடுங்காலமாகவே நமது சமையல் மற்றும் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெய்யில் சமைக்கப்பட்ட உணவுகள் பேருதவி புரிகிறது.

தேங்காய் எண்ணெய்யில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கின்றன. மேலும் கோடைகாலங்களில் தேங்காய் எண்ணெய்யை மேற்புற தோலில் பூசி கொள்வதால் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்கலாம்.
 
ரத்த காயங்களில் அடிக்கடி நீர் படுவதை தவிர்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு நிவாரணமாக அக்காயங்களில் தேங்காய் எண்ணெய்யை நன்கு தடவுவதன் மூலம்  நீர் புகாமல் பாதுகாப்பு ஏற்படுவதோடு. அப்புண்கள் மற்றும் காயங்களை வேகமாக ஆற்றவும் உதவுகிறது.
 
தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக  குறைகிறது.
 
தேங்காய் எண்ணெய் கூந்தலின் உச்சந்தலையில் வறட்சியை நீக்குகிறது. இந்த பிரச்சனை மறைந்துவிடும், உங்கள் தலைமுடியை தேங்காய் எண்ணெய்யுடன் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மசாஜ் செய்யுங்கள்.
 
தினந்தோறும் தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை தேய்த்து வருவதன் மூலம் தலை முடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் சுலபமாக தீரும்.
 
வயிறு மற்றும் குடல்களில் ஏற்பட்டும் அல்சர், குடல்களில் தங்கியிருக்கும் நுண்ணுயிரிகள், நச்சுக்கள், மலச்சிக்கல், அஜீரணம் போன்றவை விரைவில் நீங்க தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடு வருவதன் மூலம் சிறந்த நிவாரணம் பெற முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments