Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் உள்ள காபித்தூளை கொண்டு முகத்தை பராமரிக்க எளிய குறிப்புகள் !!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (17:51 IST)
பொதுவாக சிலர் அடிக்கடி வெயிலில் செல்வதனால் முகம் வறண்டு அழுக்குகள் நிறைந்து காணப்படும். இதற்காக பியூட்டி பாலர்களுக்கு செல்லவேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் காபியை கொண்டு இதனை சரி செய்ய முடியும்.

காபித்தூளை கொண்டு முகத்திற்கு ஸ்க்ரப் செய்யும்போது முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, பொலிவாகவும் மென்மையாகவும் மாறிவிடும். அதுமட்டுமின்றி சருமத்தை இறுக செய்யும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கம், சூரிய கதிரால் ஏற்பட்ட கருமை நிறம் ஆகியவை அகன்று முகத்தை ஜொலிக்க செய்யும்.
 
தேவையானவை: காபித்தூள் ஒரு கப், பட்டை பொடி 2 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் 3 தேக்கரண்டி, சர்க்கரை ஒரு கப். செய்முறை: ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். அதில் காபி தூள், பட்டை தூள் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 
இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்த கொண்டு வாரத்தில் மூன்று முறை உடலுக்கு ஸ்க்ரப் செய்து கொள்ளலாம். முகத்தில் ஸ்க்ரப் செய்து வந்தால் இறந்த செல்கள் அகன்று முகம் பிரகாசமாகும்.
 
காபி முகத்தில் அதிகப்படியாக சுரக்கும் எண்ணெய் பிசுக்கை குறைக்கும். பட்டை தூள் சருமத்தில் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். அதுமட்டுமின்றி இந்த ஸ்க்ரப் முகத்தை பொழிவு பெற செய்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments