Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருவளையங்களை காணாமல் போகச்செய்யும் சில அற்புத குறிப்புகள் !!

Webdunia
வாழைப் பழத்துடன் இரண்டு டீஸ்பூன் பால் சேர்த்து அரைக்கவும். இதை கண்களைச் சுற்றி அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு மசாஜ் கொடுத்து, பின்னர் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர. நாளடைவில் கருவளையங்கள் நீங்கும்.

வெள்ளரி, தக்காளி, வாழைப் பழம், உருளைக்கிழங்கு. இவை அனைத்தையும் ஸ்லைஸ் செய்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளிர்ந்ததும் அவற்றை எடுத்து, மூடிய கண்களின் மேல் ஒவ்வொன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு நிமிடங்களுக்கு வைத்து எடுக்கவும். கணினி திரையில் வேலைசெய்வதால் ஏற்படும் கண் எரிச்சல் நீங்கவும், கண்கள் வறட்சியடையாமல் தவிர்க்கவும் இவை உதவும்.
 
உடல் இளைப்பவர்கள், பிரசவம் ஆன பெண்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் இவர்களுக்கு எல்லாம் உடலில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்படும். நான்கு துண்டுகள் வாழைப்பழத்துடன் இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்துக் கலந்து தினமும் அந்தத் தழும்புகள் மேல் தடவி வந்தால், நாளடைவில் மறையும்.
 
 இரண்டு துண்டுகள் வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேங்காய்த் துருவல், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச் சாறு, இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து, கன்னங்களில் ‘பேக்’ போட்டுக்கொள்ள, ஈரப்பதம் தக்கவைக்கப்படுவதோடு கன்னங்கள் பளபளக்கும்.
 
ஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் பால், கால் டீஸ்பூன் பயத்த மாவு, கால் டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் சந்தனம். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். உடலில் முதலில் நல்லெண்ணெய் மசாஜ் கொடுத்து, பின்னர் இந்தக் கலவையை அப்ளை செய்து, மசாஜ் கொடுத்து குளிக்கவும். இவ்வாறு செய்தால் சரும நிறம் சீராக இருக்கும்; ஆங்காங்கே கறுப்பாக மாறுவதைத் தவிர்க்கலாம். இதை வாரம் ஒரு முறை செய்யலாம்.
 
இரண்டு துண்டுகள் வாழைப் பழம் மற்றும் இரண்டு துண்டுகள் சப்போட்டா பழத்தை இரண்டு டீஸ்பூன் பாலுடன் நன்கு கலந்து, அலர்ஜி வந்த இடங்களில் தடவி காயவிட்டு அலச, சருமப் பிரச்னைகள் மறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி பயன்படுத்துங்கள்.. கருப்பட்டியால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்..!

கருப்பு திராட்சையில் இருக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments