Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியமான கூந்தலை பெற உதவும் உணவுகள் என்ன...?

Webdunia
கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, புரோக்கோலி, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், “வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா  கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதிசெய்து, தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.
 
நெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள ‘வைட்டமின் சி’  சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
 
ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு  ஊட்டமளிக்கிறது.
 
‘பயோட்டின்’ கூந்தல், சருமம் மற்றும் நகம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் நரைப்பதை தடுக்கும் கெரட்டின் உற்பத்திக்கு இது உதவுகிறது. கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்திக்கு “நியாசின்” உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால்பொருட்களில்  “பயோட்டின்’ நிறைந்துள்ளது.
 
கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.
 
இரும்புச்சத்து, கூந்தலுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கல்பவிருக்‌ஷா வருடாந்திர கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கின் 17-வது பதிப்பு!

சிறுகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments