Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திராஷ்டம நாளில் சந்திரேஸ்வரரை வழிபட்டால் சங்கடங்கள் தீரும்..!

Mahendran
வியாழன், 6 மார்ச் 2025 (19:45 IST)
காஞ்சிபுரத்தில் உள்ள நவக்கிரகத் தலங்களில் சந்திரனுக்கான சிறப்பு தலம் சந்திரேஸ்வரர் ஆலயமாகும். ‘சந்திரேசம்’ என அழைக்கப்படும் இத்தலம், காஞ்சி புராணத்தில் ‘சோமேச்சுரம்’ என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சிவபெருமான் இங்கு ‘சோமசுந்தரர்’ என பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சர்வ தீர்த்தத்தின் தென் கரையில் அமைந்துள்ள இத்தலம், மகாகவி காளிதாசரால் புகழப்பெற்ற காஞ்சிபுரத்தின் சிறப்பை உயர்த்துகிறது.
 
இத்தலத்தில் உள்ள தீர்த்தம் ‘சந்திர தீர்த்தம்’ என அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிய சிறிய திருக்கோவிலாக அமைந்துள்ள இதில் முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை உள்ளன. மூலவர் சந்திரேஸ்வரர் லிங்க ரூபத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
 
சந்திரேஸ்வரர் திருக்கோவில் கருவறையில், சிவபெருமான், பார்வதி, முருகன் இணைந்து ‘சோமாஸ்கந்த மூர்த்தியாக’ எழுந்தருளியிருப்பது முக்கிய சிறப்பாகும். விநாயகர், வள்ளி-தெய்வானை, நந்திதேவர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பல தேவதைகள் தனி சன்னிதிகளில் திகழ்கின்றனர். ஆலய விமானத்தில் சப்தரிஷிகள் சிற்ப வடிவத்தில் காணக்கூடியது ஒரு அபூர்வக் காட்சியாகும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு எதிலும் நன்மை உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (07.05.2025)!

அக்னி நட்சத்திரத்தில் அண்ணாமலையாரை குளிர்விக்கும் அபிஷேகம்.. பக்தர்கள் வழிபாடு..!

இந்த ராசிக்காரர்களுக்கு இயந்திரம், நெருப்பில் கவனமாக இருக்கவும்!- இன்றைய ராசி பலன்கள் (06.05.2025)!

19 ஆண்டுகள் கழித்து பாபநாசம் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை!- இன்றைய ராசி பலன்கள் (05.05.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments