Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகரின் பரிபூரண அருளை பெற்றுத்தரும் சதுர்த்தி விரதமும் பலன்களும் !!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (10:04 IST)
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகவும் துன்பங்கள், துயரங்கள், சங்கடங்களை நீக்கி சகல சௌபாக்கியத்தையும் தரக்கூடியது விநாயகர் சதுர்த்தி விரதம். அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் விநாயகரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.


இந்த விநாயகர் சதுர்த்தி விரதம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வேண்டி, இருக்கும் பரிபூரண விரதமாகும். விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பதால் சனியின் பாதிப்பு குறையும்.

சதுர்த்தி நாளில் குழந்தைகள் பெயரில் விநாயகருக்கு அர்ச்சனை செய்து பென்சில், நோட்டுகள், உறவினர் அல்லாத குழந்தைகளுக்கு இனிப்பும் தானம் தந்தால் வீட்டு குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் தேடி வரும்.

பிள்ளை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று அரிசி சாதத்தை சமைத்து பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளையாக பாவித்து தூவினால் விநாயகரின் அருளால் பிள்ளை வரம் கிடைக்கும்.

விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு துன்பங்கள் நீங்கி நிலையான சந்தோஷம் கிடைக்கும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.

கேது திசை புக்தி நடப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா தடைகளும் விலகும் புத்தி சாலியாவீர்கள். வேலையில்லாமல் சிரமப்படுபவர்களும், நீண்ட நாட்கள் நோயினால் அவதிப்படுபவர்களும், சங்கடங்கள் தீர இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகரை நினைத்து விரதம் இருக்கலாம். இதனால் தீராத நோய்களும் தீரும், திருமண தடை அகலும்.

தீராத கடன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் 11 செவ்வாய்கிழமைகளில் தொடர்ந்து விநாயகருக்கு வெற்றிலைமாலை அணிவித்து அங்காரக சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் கடன் பிரச்சினை தீரும். திருமணமாகாதவர்கள் கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த சதுர்த்தி விரதம் இருந்தால் நல்ல மண வாழ்க்கை அமையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவலிங்கத்தில் இருந்து தோன்றிய அபூர்வ நீரூற்று: திண்டுக்கல் அருகே பக்தர்கள் பரவசம்..

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி தேரோட்டம்.. விரதத்தை முடித்த முருகன் பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு முக்கிய நபர்களுடன் சந்திப்பு ஏற்படும்!– இன்றைய ராசி பலன்கள்(07.11.2024)!

கந்த சஷ்டி திருவிழா: தங்க கவசம், வைரவேல் உடன் காட்சியளித்த சுவாமிமலை முருகன்..!

திருச்செந்தூரில் கந்தசஷ்டி: நீண்ட வரிசையில் பக்தர்கள்.. கடற்கரையில் பெருங்கூட்டம்..!

அடுத்த கட்டுரையில்