தேவகோட்டையில் ரெங்க நாதப்பெருமாள் கோவில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இக்கோவியில் சித்திரை விழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. அதற்கு முன்னதாக, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காப்புக்கட்டுதலுடன் கொடியேற்றம் தொடங்கியது.
மாலையில் பெருமாள் தோளுங்கினியாள் அலங்காரதிதில் தேவியர்களுடன் காட்சி தந்தார்.
அதன்பினர், கருட வாகனம், ஹனுமந்த வாகனம், , சேஷ வாகனம், யானை வாககனம், புஷ்ப வாகனம், குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளுகிறார்.
இந்த நிலையில், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், யானை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளவுள்ளார்.
18 ஆம் தேதி மாலையில் வெண்ணெய் தாழி சேவையில் காட்சியளிக்கிறார். 20 ஆம் தேதி இரவு புஷ்ப பல்லாக்கு, கள்ளழகர் சேவையில் காட்சியளிக்கிறார். என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.