முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி கோவிலில் கந்த சஷ்டி விழாவிற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் சூரசம்ஹாரம் தேதியையும் கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் பழனி தண்டாயுத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு காப்பு கட்டுகளுடன் கந்த சஷ்டி விழா தொடங்க இருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய பகுதி ஆன சூரசம்ஹாரம் நவம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நான்கு முப்பது மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் என்றும் அதன் பிறகு மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாள் நவம்பர் 19ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் ஆன தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran