கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விஷ்ணு துர்க்கைக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கரூர் நகரின் மையப்பகுதியில், கரூர் மாரியம்மன் ஆலயத்தின் அருகேயும், தேரடி வீதியிலும் அமைந்து எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில், நவராத்திரியை முன்னிட்டு, கோயிலின் பரிவாரத்தெய்வங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கைக்கு ஒவ்வொரு தினமும் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் 11 ம் தினமான நிறைவு தினமான நேற்று (20-10-18) அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டதோடு, அம்மன் முன்பு ஆலய ஸ்தானிகர் வசந்த் சர்மா லலிதா சஹஸ்கர நாம நிகழ்ச்சி நடத்தினார்.
பின்னர் தொடர்ந்து, கோபுர ஆரத்தி, கற்பூர ஆரத்தி உள்ளிட்ட ஆரத்திகளுடன் மஹா தீபாராதனையுடன் அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்த விஷ்ணு துர்க்கை பக்தர்களுக்கு காட்சியளித்தார்.