Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கரூர் அருகே நடைபெற்ற வீர குமாரர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி

கரூர் அருகே   நடைபெற்ற வீர குமாரர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி
, ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (09:01 IST)
கரூர் மாவட்டம் குளித்தளை நகராட்சிக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஇராமலிங்க சௌடேஸ்வரியம்மன் கோவில் பராகத்தி திருவிழா கடந்த 11-ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முகூர்தகால் நடுவிழாவிற்கு கணபதி ஹோமம் காப்புகட்டுதல் மகாஅபிசேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் துவங்கியது.


 
திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று காவிரி ஆற்றில் இருந்து சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீஇராமலிங்க சௌடேஸ்வரி அம்மனை அலங்கரிக்கபட்ட வாகனத்தில் அமரவைத்து  நகரின் முக்கிய வீதிகள் வழியாக  மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக  அழைத்து சென்று பின்னர் கோவிலை வந்தடைந்தது. அப்போது  அம்மனை வணங்கி விரதமிருந்து வந்த வீரகுமாரர்கள் இரு கைகளிலும் கத்திகளை ஏந்தியும் லாவகமாக கையாண்டு  ஆட்டமாடியவாறு தங்களது மார்பு மற்றும் கைகளில் வெட்டிகொண்டு தங்களது வழிபாட்டினை மேற்கொண்டனர்.  அப்போது 'தீஸ்கோ தள்ளி தீஸ்கோ' என்றும் கோஷங்களை எழுப்பியவாறு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்தாருடன் கலந்து கொண்டு அம்மனை வணங்கினர்.


ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2018 தமிழ் புத்தாண்டு விளம்பி வருட பொது பலன்கள்