Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுபக்ருது வருட சந்திர கிரகணம்! செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என்ன?

lunar eclipse
, திங்கள், 31 அக்டோபர் 2022 (13:58 IST)
வரும் நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணம் நடைபெற உள்ள நிலையில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

இந்த ஆண்டில் சந்திர கிரகணம் வரும் நவம்பர் 8ம் (ஐப்பசி 22) தேதி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இந்த சந்திர கிரகணம் மதியம் 2.30 மணியளவில் தொடங்கி மாலை 6.20 மணிக்கு முடிவடையும். இந்த சமயத்தில் இரவு நேரமாக உள்ள மற்ற நாடுகளில் கிரகணத்தை முழுமையாக காண முடியும்.

சந்திர கிரகணத்தின்போது செய்யக்கூடாதவை;

கிரகண சமயத்தில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எனவே சுபகாரியங்கள் செய்யக்கூடாது.

கிரகணம் நடைபெறும் சமயத்தில் வெளியே பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

சந்திர கிரகண சமயத்தில் சாப்பிட கூடாது. அது செரிமானத்தை குறைப்பதுடன் உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம்.

கிரகண சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் கத்தி உள்ளிட்ட கூர்மையான பொருட்களை தொடவோ, கையில் வைத்திருக்கவோ கூடாது.

சந்திர கிரகண சமயத்தில் தம்பதியர் உடல் உறவு கொள்ளக் கூடாது.

கிரகண அலைகள் தாக்காமல் இருக்க கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் உடல் பலகீனமானவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.


webdunia


சந்திர கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவை;

சமைத்த உணவுகள் மீது தர்ப்பை புல்லை வைக்க வேண்டும். எதிர்மறை சக்திகளை தடுக்கும் ஆற்றல் தர்ப்பை புல்லுக்கு உண்டு

கிரகண சமயத்தில் கடவுளரை நோக்கி வேண்டுவது கூடுதல் பலன் தரும். அச்சமயம் நவக்கிரக துதி அல்லது கிரகண துதி உள்ளிட்டவற்றை பாடி பிரார்த்திக்கலாம்.

கிரகண சமயத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமல் உபவாசம் இருந்து, பின் குளித்து பூஜை நடத்துவது வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை அளிக்கும்.

கிரகண சமயத்தில் செய்யும் செயல்கள், கூறும் மந்திரங்கள் ஆயிரம் மடங்காக நமக்கு நேர்மறை எண்ணங்களை அளிக்கும் என்பதால் கிரகண சமயத்தில் சண்டை, அவதூறு சொற்களை தவிர்க்க வேண்டும்.

கிரகணம் முடிந்த உடன் குளித்து விட்டு கோவில்களுக்கு சென்று வணங்குவது பெரும் பலனை தரும்.

கிரகணம் முடிந்த பின் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மூன்று தலைமுறைக்கான புண்ணியத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

Edited by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (31-10-2022)!