Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணப் பற்றாகுறையை போக்க எளிய வழி

simplest way
Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (23:58 IST)
வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். உங்கள்  கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும்.
 
வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் கொழிக்கும். 
 
பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில  அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 
 
பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வந்தடையும். ஜோடி கழுதைப் படம், ஓடும் வெள்ளை குதிரை படம், அடிக்கடி பார்க்க பணம்  வரும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும். ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும். ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர  பணம் ஆகர்ஷணமாகும். 
 
உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி  ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது. 
 
உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசை மீதுள்ள உணவு வகைகள் தெரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும்  வாய்ப்பு ஏற்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலூர் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் .. சிலம்பாட்டம், மயிலாட்டம் பாரம்பரிய நடனங்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (15.05.2025)!

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு திருக்கோவில் பெருமைகள்..!

10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம்! - இளம்பெண் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments