Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலில் செப்டம்பர் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்: ஆன்லைனில் கிடைக்கும் தேதி அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (17:58 IST)
திருப்பதி கோவிலில் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி முதல் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட கட்டண சேவைகளுக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் 21ஆம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் மேற்கண்ட சேவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் 21ஆம் தேதி காலை 12 மணிக்கு எலக்ட்ரானிக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில் மூலம் தகவல் அனுப்பப்படும். அதனை வைத்துக்கொண்டு பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். 
 
அதேபோல் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் வருடாந்திர பவித்ரா உற்சவம் ஏழுமலையான் கோவில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்டுகள் ஜூன் 22 ஆம் தேதி ஆன்லைனில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கந்த சஷ்டி திருவிழா: தங்க கவசம், வைரவேல் உடன் காட்சியளித்த சுவாமிமலை முருகன்..!

திருச்செந்தூரில் கந்தசஷ்டி: நீண்ட வரிசையில் பக்தர்கள்.. கடற்கரையில் பெருங்கூட்டம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் உண்டாகும்!– இன்றைய ராசி பலன்கள்(07.11.2024)!

திருச்செந்தூரில் கந்த சஷ்டி: விரதம் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

64 ஆண்டுகளுக்கு பிறகு வரும் குபேர யோகம்! இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியும்?

அடுத்த கட்டுரையில்
Show comments