மருதமலை மலை கோவிலுக்கு வாகனங்களில் செல்ல தடை: அதிரடி அறிவிப்பு
கார்த்திகை தீபத்திருநாள் அன்று மருதமலை கோயிலுக்கு பக்தர்கள் வாகனங்களில் செல்ல தடை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத் திருநாள் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் திருவண்ணாமலை மற்றும் முருகப்பெருமானின் அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் முருகப்பெருமானின் முக்கிய கோயில்களில் ஒன்றான மருதமலையில் டிசம்பர் 6ஆம் தேதி கார்த்திகை தீபத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது
இந்த நிலையில் அன்றைய தினம் மலை அடிவாரத்திலிருந்து மலை கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
டிசம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மலை அடிவாரத்திலிருந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று பக்தர்கள் மலைக்கோவிலுக்கு தேவஸ்தான பேருந்துகள் மூலம் மட்டும் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.