Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன...?

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (17:39 IST)
இறைவனுக்கு விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக தான். ஒரு மனிதனுக்கு முக்கியமான பலன்கள் மூன்று உள்ளது. செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் மனிதனுக்கு மிக முக்கியமானதாகும். இவை அனைத்தும் பரிபூரணமாக கிடைக்க சனி விரதம் இருக்க வேண்டும்.


நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தை கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே.

சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. இந்த விரதத்தை அனுஷ்டிக்க உண்மையான பக்தியே தேவையான பொருள். மகாவிஷ்ணு தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை.

பாவங்கள் குறைந்து நீண்ட ஆயுள் வேண்டும் என்று எண்ணும் மனிதனுக்கு இந்த சனி விரதமே பரிகாரம். சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைபிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். சனிக்கிழமை விரதத்தை கடைபிடித்தால் சகல செல்வமும் பெற்று வாழலாம்.

சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

64 ஆண்டுகளுக்கு பிறகு வரும் குபேர யோகம்! இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியும்?

இந்த ராசிக்காரர்களுக்கு சூரியன், புதன் சேர்க்கையால் நன்மை உண்டாகும்!– இன்றைய ராசி பலன்கள்(06.11.2024)!

ஒரே உடலில் ராகு-கேது.. இந்த கோவிலுக்கு சென்றால் 100 வயது வரை வாழலாம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(04.11.2024)!

மனப்பிரச்சனை, பணப்பிரச்சனையா? இந்த கோவிலுக்கு சென்றால் சரியாகிவிடும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments