Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திகை விரதம் இருந்து வழிபடுவதால் என்ன பலன்...?

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (10:11 IST)
கார்த்திகை பெண்கள் ஸ்கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் ஸ்கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். 

 
அப்போது சிவபெருமான் கிருத்திகை பெண்களே நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.
 
அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருக பக்தர்கள் யாவரும் கிருத்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.
 
கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று நீராடி பகலில் உணவு உண்டு இரவில் ஏதும் உண்ணாதிருத்தல் வேண்டும். மறுநாள் கிருத்திகை அன்று அதிகாலையில் நதி நீராடிய திருநீறு இட்டு வீட்டில் குத்து விளக்கேற்றி தூபம் தீபம் காட்டி நிவேதனம் செய்து சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்து முருகனை வழிபாடு புரிய வேண்டும். அன்று நீர் மட்டும் அருந்தி முருகப் பெருமானின் காயத்ரி மந்திரங்கள், முருகன் ஷஷ்டி கவசத்தையும் பாராயணம் செய்து ஜெபம், தியானம், கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும். 
 
இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து ஸ்கந்தனின் மந்திரங்களை கூறி மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து ஸ்கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவு உண்ண வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து நிம்மதி அளிக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(18.09.2024)!

புனித மாதம் புரட்டாசி.. புரட்டாசி மாதத்தின் ஆன்மீக முக்கியத்துவம்..!

புரட்டாசி மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மீனம்!

புரட்டாசி மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கும்பம்!

புரட்டாசி மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மகரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments