Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாமி ஐயப்பனை “தர்ம சாஸ்தா” என்று அழைப்பது ஏன்?

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (09:13 IST)
சபரிமலை வாசன் சுவாமி ஐயப்பன் பல்வேறு நாமங்களால் அழைக்கப்படுகிறார். அவற்றில் தர்ம சாஸ்தா என்பது சுவாமி ஐயப்பனுக்கு புகழ்வாய்ந்த பெயராகும். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.



மகிஷி என்ற அரக்கியை வதம் செய்து புலியை வாகனமாக கொண்டு சபரிமலையில் தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் சுவாமி ஐயப்பனை விரதம் இருந்து வணங்கினால் பூரண அருள் கிடைக்கும். சுவாமி ஐயப்பனை “தர்ம சாஸ்தா” என்று அழைப்பது வழக்கம். சாஸ்தா என்றால் ஆள்பவன் என்று பொருள். தவறு செய்பவரை தண்டிப்பதும், கட்டளைகள் இடுவதும் ஆள்பவரின் அதிகாரம்.

உதாரணத்திற்கு முருகபெருமானை “பிரம்ம சாஸ்தா” என்பார்கள். பிரணவ மந்திரம் மறந்த பிரம்மரை சிறை வைத்தவர் அவர். தக்‌ஷ பிரஜாபதியை கண்டித்த வீரபத்திரர் தக்‌ஷ சாஸ்தாவாக வணங்கப்படுகிறார். அவ்வாறாக தர்மத்தை காக்கும் சுவாமி ஐயப்பன் தர்ம சாஸ்தாவாக வணங்கப்படுகிறார்.

யோக நிலையில அமர்ந்திருக்கும் சுவாமி ஐயப்பன் சாஸ்திரங்களை உபதேசித்து அதன்படி வாழ்பவர். அதனால்தான் சுவாமி ஐயப்பனுக்கு மாலை போடுபவர்கள் அனைத்து வித அனுஷ்டானங்களையும் பயபக்தியுடன் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இதை உணர்த்தவே சபரிமலை 18ம் படியில் சுவர்க்கத்தை அளிக்கும் தத்வமஸி என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது.

சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்:

கரம் தக்ஷிணம் ஞான முத்ராபிராமம்
வரம் வாமஹஸ்தம் சஜாநூபரிஸ்தம்
வஸந்தம் சதா யோக பட்டாபிராமம்
பஜே சம்பு விஷன்வோஸ் ஸஷுதம் பூதனாதம்

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கந்த சஷ்டி திருவிழா: தங்க கவசம், வைரவேல் உடன் காட்சியளித்த சுவாமிமலை முருகன்..!

திருச்செந்தூரில் கந்தசஷ்டி: நீண்ட வரிசையில் பக்தர்கள்.. கடற்கரையில் பெருங்கூட்டம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் உண்டாகும்!– இன்றைய ராசி பலன்கள்(07.11.2024)!

திருச்செந்தூரில் கந்த சஷ்டி: விரதம் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

64 ஆண்டுகளுக்கு பிறகு வரும் குபேர யோகம்! இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியும்?

அடுத்த கட்டுரையில்
Show comments