Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை வழிபாடு செய்வது ஏன்...?

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (11:51 IST)
அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த போது சீதையை தேடிப்போன அனுமன் சிம்சுகா மரத்தடியில் வீற்றிருந்த சீதையை கண்டதும் ஸ்ரீ ராமனை பற்றி சொல்லி சீதையின் நம்பிக்கைக்கு பாத்திரமானார்.


பொதுவாக யாரேனும் பெரியவர்களை நமஸ்கரித்தால் அவர்களை அட்சதை தூவி  ஆசீர்வதிப்பது வழக்கம்.

அனுமன் சேவித்த போது சீதைக்கு அட்சதையோ புஷ்பமோ கிடைக்கவில்லை. ஆனால் அருகில் தடவிய போது வெற்றிலை  இலைகள் கிடைக்க அதனையே அனுமன் தலை மீது தூவ அனுமனும் அந்த வெற்றிலைகளை ஒரு நூலில் கோர்த்து சீதையிடம் கொடுத்து தனக்கு  மாலையாக அணிவிக்குமாறு கேட்டு அதை கழுத்தில் அணிந்ததாகவும் அதன் காரணமே அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவதாகவும் வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ளது.

வெற்றிலை மாலை சார்த்தி ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால், தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும். நல்ல உத்தியோகமும் உத்தியோகத்தில் பதவி உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். மேலும் கடன் தொல்லை நீங்கும் என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

நமது விருப்பங்கள் நிறைவேற கீழ்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 108 தடவை சொல்லி வரலாம்.

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்:

‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு இயந்திரம், நெருப்பில் கவனமாக இருக்கவும்!- இன்றைய ராசி பலன்கள் (06.05.2025)!

19 ஆண்டுகள் கழித்து பாபநாசம் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை!- இன்றைய ராசி பலன்கள் (05.05.2025)!

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரமோற்சவம் விழா.. இன்று கொடியேற்றம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு உழைப்பு ஏற்ற நற்பெயர் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (03.05.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments