Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 வருடமாக சிங்கத்துக்கு குரல் கொடுக்க காத்திருந்த அரவிந்த்சாமி

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (14:01 IST)
டிஸ்னி தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் ஹாலிவுட் திரைப்படம் “லயன் கிங்”. இதில் சிங்க கதாப்பாத்திரம் ஒன்றுக்கு அரவிந்த்சாமி குரல் கொடுக்கிறார்.

டிஸ்னியின் தயாரிப்பில் உருவான கார்ட்டூன் படங்கள் எல்லாம் இப்போது திரைப்படமாக உருவாகி ஹிட் அடித்து வருகிறது. தனது ஆகசிறந்த கார்ட்டூன் படமான “ஜங்கிள் புக்”கை நிஜ திரைப்படமாக தயாரித்து வெளியிட்டது டிஸ்னி நிறுவனம். உலகமெங்கும் வசூலை அது அள்ளி குவித்தது. உடனே டிஸ்னி பரணில் வைத்திருந்த தனது பழைய கார்ட்டூன் படங்களை தூசி தட்டி எழுப்பி புத்துயிர் கொடுத்து வருகிறது.

அந்த வகையில் அடுத்து “அலாதீன்” கார்ட்டூன் திரைப்படமாய் வளிவந்து ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து டிஸ்னியின் மாஸ்டர் ப்ளாஸ்டரான “லயன் கிங்” திரைப்படம் வரும் ஜூலை 17ல் வெளியாகவுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள பரந்து விரிந்த காட்டின் ராஜா சிங்கம் முசாஃபா. அதனுடைய குட்டி சிங்கம் சிம்பா. முசாஃபாவை கொன்று ராஜாவாக நினைக்கும் அதன் அண்ணன் ஸ்கார். இதுதான் லயன் கிங் கதையின் அப்போதைய கதை. அதன் மூலத்தை மாற்றாமல் சிறுசிறு விஷயங்களை மாற்றி நவீன கிராபிக் தொழில்நுட்பத்தில் வெளியிட இருக்கிறார்கள்.

”லயன் கிங்”கின் ஹிந்தி பதிப்பில் நடிகர் ஷாரூக்கான் ராஜா சிங்கம் முசாஃபாவுக்கு டப்பிங் குரல் கொடுக்கிறார். அதேபோல தமிழில் முசாஃபாவுக்கு டப்பிங் குரல் கொடுக்க அரவிந்த்சாமியிடம் கேட்டனர். ஏனென்றால் 20 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த கார்ட்டூன் லயன் கிங் படத்தில் முசாஃபாவுக்கு குரல் கொடுத்தது நம்ம அரவிந்த்சாமிதான்.

ஆனால் இந்த முறை ராஜா சிங்கம் முசாஃபாவுக்கு டப்பிங் பேச மறுத்துவிட்டார். மாறாக “எனக்கு வில்லன் சிங்கம் ஸ்காரைதான் பிடிக்கும். நான் அதற்கு குரல் கொடுக்கிறேன்” என கூறியுள்ளார். டிஸ்னியும் சம்மதிக்க அனிமேஷன் அவதாரில் வில்லனாய் தன் குரல் மூலம் எண்ட்ரி ஆகிறார் அரவிந்த்சாமி. இதில் குட்டி சிம்பாவுக்கு டப்பிங் பேசியிருப்பது நடிகர் சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பாவின் சிம்ம கர்ஜனையை ஜூலை 17ல் திரையரங்குகளில் காணலாம். ட்ரெய்லரை இங்கே காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments