Publish Date: Tue, 20 Sep 2022 (17:46 IST)
Updated Date: Tue, 20 Sep 2022 (17:50 IST)
'கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த சார்பாட்டா பரம்பரை நடிகர்!
தனுஷ் நடிக்கவிருக்கும் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்
தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் சந்தீப் கிஷான் மற்றும் நிவேதிதா சதீஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பாட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் நடித்த ஜான் கொகைன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே அஜீத் படத்தில் நடித்து வரும் ஜான் கொகைன் தற்போது தனுஷ் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகயிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.