Publish Date: Fri, 04 Nov 2022 (21:14 IST)
Updated Date: Fri, 04 Nov 2022 (21:16 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்து தெரிந்து கொள்ள http://www.maduraimeenakshi.org என்ற இணையதளம் செயல்பட்டு வந்த நிலையில் அந்த இணையதளம் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
ஏற்கனவே செயல்பட்டு வந்த http://www.maduraimeenakshi.org என்ற இணையதளம் மூடப்படுவதாகவும், தற்போது அந்த இணையதளத்திற்கு பதிலாக புதிய இணையதளமான http://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
ஆனால் அதே நேரத்தில் பழைய இணைய தளத்தை தொடர்பு கொண்டாலும் புதிய இணைய தளத்திற்கு செல்லும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்