Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்முன்னு கெடந்த ரசிகர்களுக்கு கும்முன்னு குவிந்த அப்டேட்ஸ்! – கலகலக்கும் மார்வெல் சிரிஸ்!

Hollywood
Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (10:44 IST)
கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக மார்வெல் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் வெளியாகாத நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ஒரே நாளில் வெளியிட்டுள்ளது மார்வெல்.

உலகம் முழுவதும் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் படங்களுக்கு பெரும் ரசிக பட்டாளங்களே உண்டு. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் விருமுறை நாட்களில் தியேட்டர் செல்ல ஏற்ற ஆக்‌ஷன் சூப்பர்ஹீரோ படங்களாக மார்வெல் படங்கள் உள்ளன. கடந்த பிப்ரவரியில் மார்வெலின் ஸ்பைடர்மேன் படம் வெளியான நிலையில் கொரோனா காரணமாக இதுவரை வேறெந்த படங்களும் வெளியாகவில்லை.

கடந்த ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த ப்ளாக் விடோ படமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்து வெளியாக போகும் வெப் சிரிஸ் மற்றும் படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மார்வெல் ஸ்டுடியோஸ். அதன்படி ஹாவ்க் ஐ, ஐ அம் க்ரூட், ஆர்மர் வார்ஸ், அயர்ன் ஹார்ட், சீக்ரெட் இன்வேஷன் உள்ளிட்ட வெப் சிரிஸ்கள் 2022ம் ஆண்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டில் ஃபால்கன் விண்டர் சோல்ஜர், வாண்டா விஷன், லோகி, வாட் இஃப் உள்ளிட்ட தொடர்கள் வெளியாவதாகவும் அறிவித்துள்ள மார்வெல் நிறுவனம் இவை அனைத்தையும் டிஸ்னி ப்ளஸ் ஓடிடி மூலம் காணலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஒரு வருட காலமாக மார்வெல் படங்கள் இன்றி இருந்த ரசிகர்கள் ஒரே நாளில் வெளியான இந்த அறிவிப்புகளால் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments