Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’டாக்டர்’’ சிவகார்த்திகேயனுக்கு நன்றிகூறிய மருத்துவ மாணவி !

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (18:14 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த செலவில் தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி சஹானாவுக்கு நீட் தேர்வில் பயிற்சியில் படிக்க வைத்தார். இந்நிலையில் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

கடந்தாண்டு பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையிலும் அவரது வீட்டில் அவரை மேற்படிப்பு படிக்க வைக்க முடியாத சூழ்நிலை இருந்தது.

இதையறிந்த நடிகர் சிவகார்த்திகேயன்,

மாணவி சஹானாவுக்கு நீட் பயிற்சிக்கான மொத்த செலவையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றிருந்தார்.

இந்நிலையில் சஹானாவுக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
மாணவி சஹானாவுக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவி சஹானா நடிகர் சிவகார்த்திகேயனால் தனது மருத்துவக் கனவு நனவானதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட உள் ஒதுக்கீட்டில் எனக்கு இடம் கிடைத்து மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

நடிகர் சிவகார்த்தியன் உதவியால் நீட் தேர்வில் வெற்றி பெற்று தற்போது உள் ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளதாக நெகிழ்சியுடன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments