Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோ கிராபிக்ஸ்.. படத்துக்காக ஒரு புதிய நகரத்தையே உருவாக்கிய கிறிஸ்டோபர் நோலன்! - வாய்பிளக்கும் ஹாலிவுட்!

Prasanth Karthick
வியாழன், 6 மார்ச் 2025 (13:07 IST)

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் புராதாண காவியமான ஒடிசி உருவாகத் தொடங்கியுள்ள நிலையில் அதற்காக ஒரு புதிய நகரத்தையே கட்டி எழுப்பி வருகிறார்களாம்.

 

உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் இயக்குனர்களில் முக்கியமானவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய டார்க் நைட் ட்ரைலாஜி, இன்செப்ஷன், இண்டெஸ்டெல்லார் உள்ளிட்ட படங்களுக்கு தமிழகத்திலுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது முதன்முறையாக வரலாற்று இதிகாச படத்தை இயக்குகிறார் நோலன். ஹாலிவுட்டில் பெரும்பாலும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் நிலையில், நோலன் அதற்கு முற்றிலும் நேரெதிரானவர். அவருக்கு கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்துவது பிடிக்காது என்பதால் அவர் படங்களில் பல காட்சிகளை ஒரிஜினலாகவே படமாக்குவார்.

 

இந்நிலையில் ஹோமரின் ஒடிசி என்ற கிரேக்க காவியத்தை அவர் இயக்கும் நிலையில் அதற்காக கிராபிக்ஸ் பயன்படுத்தாமல் ஒரிஜினல் செட்டை அமைத்து வருகிறார்கள், இதற்காக ட்ரோஜன் குதிரை என்னும் உண்மையான பிரம்மாண்ட இரும்புக்குதிரையும் உருவாகி வருகிறது. இதற்காக மொரோக்கோவில் ஒரு பகுதியை மொத்தமாக் குத்தகைக்கு எடுத்து ஒரு புராதாண நகரத்தையே நிர்மாணித்து வருகின்றனர். இதனால் பட ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஒடிசிக்காக உருவாகப்பட்டுள்ள புதிய நகரத்தை கண்டு ஹாலிவுட்டே வாய் பிளந்துள்ளதாம்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல… ரைசா வில்சனின் அழகிய க்ளிக்ஸ்!

மினி ஸ்கர்ட் உடையில் மாடர்ன் லுக்கில் ஜொலிக்கும் அதுல்யா ரவி!

அமைச்சர்களுக்காக சபாநாயகர் பேசும்போது, எனக்காக அ.தி.மு.க., வினர் பேசக்கூடாதா?' வானதி

சிம்புவுக்காகத் தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்ட சந்தானம்.. ஏன் தெரியுமா?

ஷூட்டிங் இருக்கு.. அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாத மகேஷ்பாபு!

அடுத்த கட்டுரையில்
Show comments