Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பைடர்மேனை ஓரம்கட்டிய ஸேக் ஸ்னைடர்! – ரசிகர்கள் ஆஸ்கரை பெற்ற ஆர்மி ஆஃப் டெட்!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (12:50 IST)
ஆஸ்கர் விருது விழாவில் வழங்கப்படும் ரசிகர்கள் விருப்ப ஆஸ்கரை இந்த ஆண்டு ஸேக் ஸ்னைடரின் “ஆர்மி ஆஃப் டெட்” திரைப்படம் பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் சினிமா துறையினரால் மிகவும் எதிர்பார்க்கப்படும், அதிகம் பேசப்படும் விருதாக அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கர் விருதுகள் உள்ளன. இந்த ஆண்டிற்கான 94வது ஆஸ்கர் விருது விழா தற்போது நடந்து வரும் நிலையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2018ம் ஆண்டு முதலாக ரசிகர்கள் விருப்ப ஆஸ்கர் என்ற விருதையும் ஆஸ்கர் கமிட்டி அறிவித்தது. அதன்படி பிரபலமான படங்களில் ரசிகர்கள் வாக்குகளின் அடிப்படையில் படங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு ரசிகர்கள் விருப்ப ஆஸ்கர் பட்டியலில் ஸ்பைடர்மேன்; நோ வே ஹோம், சிண்ட்ரெல்லா, ஆர்மி ஆஃப் டெட், டிக் டிக் பூம் உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றிருந்தன.

அதில் ரசிகர்கள் அதிகமாக அளித்த ஆதரவினால் ஸேக் ஸ்னைடரின் ஆர்மி ஆஃப் டெட் ரசிகர்கள் விருப்ப ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ளது. முன்னதாக ஸேக் ஸ்னைடர் இயக்கிய ஜஸ்டிஸ் லீக் படத்தை வெளியிட வேண்டுமென புது இயக்கமே தொடங்கி போராடி படத்தை ரசிகர்கள் வெளியே கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

பாக்கி இல்லாமல் பாக்கிஸ்தான் சீர்குலைக்கப் படலாம்: இயக்குனர் பார்த்திபன்

அடுத்த கட்டுரையில்
Show comments