Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பற்சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு இலவங்கப்பட்டை !!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (00:30 IST)
பட்டை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் கீல்வாதம், மூட்டுவலி, தசைவலியை சரி செய்யும். அதுமட்டுமல்ல மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
 
வாயில் இருக்கும் பாக்டீரியாக்களால் பற்சிதைவு, பற்சொத்தை போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன. இலவங்கப்பட்டை வாயில் உள்ள பாக்டீரியாக்களை  அகற்றுகிறது, இதனால்தான் பற்பொடி மற்றும் பற்பசைகளில் இலவங்கப்பட்டை பயன்படுத்தபடுகிறது.
 
 
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கும். டைப் 2 சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க இலவங்கப் பட்டை  உதவுகிறது. மேலும் உடலில் உள்ள இன்சுலின் போதுமான அளவு சுரக்க உதவுகிறது.
 
ஆன்டிஆக்சிடன்டுகள் ஆக்சிஜனேற்றத்தால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையில் உள்ள பாலிஃபீனால்களின் ஆக்சிஜனேற்ற  எதிர்ப்புப் பண்பில் இது பூண்டை விட அதிக செயல்திறன் கொண்டதாகத் திகழ்கிறது.
 
உடல் எடை குறைவதற்கு இலவங்கப்பட்டை உதவுகிறது. இலவங்கப்பட்டையில் சிறிதளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கும் உடலில் உள்ள  நச்சுப்பொருள்களை வெளியேற்றவும் உதவுகிறது.
 
இலவங்க பட்டை நுரையீரலில் இருந்து சளியை அகற்றுவதால், பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு நுரையீரலில் ஏற்பட்ட இறுக்கம் மற்றும் அடைப்பை சரிசெய்ய  உதவுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments