Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளியை யாரெல்லாம் உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது தெரியுமா...?

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (23:53 IST)
புளியில் நிறைய நல்ல அம்சங்களும் செட்ட விதயங்களும் உள்ளன. ஆயிர்வேத மருத்துவத்தில் புளிக்கு முக்கிய இடமுண்டு. குறிப்பாக லேகியும் உள்ளிட்ட அவர்களது மருந்துத் தயாரிப்புகளில் புளி சேர்பார்கள். அப்போதுதான் அது கெட்டுப் போகாது.
 
வயிறு சம்பந்தப்பட்ட மருந்துகளுக்கும் புளி சேர்ப்பதுண்டு. புளி மிகச்சிறந்த மலமிளக்கி, எனவே மலச்சிக்கலுக்கும் இது நல்ல மருந்து.
 
புளிய இலையின் துளிர்களைக் வைத்துச் செய்கிற கஷாயம், மலேரியா நோய்க்கு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. புளியங்கொட்டைக்கும் மருத்துவக் குணம்  உண்டு.
 
கண்களுக்கான டிராப்ஸ் தயாரிப்பில் புளியங்கொட்டை பயன்படுத்தப்படுகிறதாம். தொண்டைக்கமறல், ஜலதோஷமாக இருக்கும் போது, ரசம் சாப்பிடச்  சொல்வார்கள், நீர்த்த புளிக்கரைசலுடன், மிளகு, சீரகமும் சேர்ந்து, தொண்டைக் கமறலை குணப்படுத்தும்.
 
புளி மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட். ரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடியது. புற்றுநோய்க்கு எதிராகப் போராடக் கூடியது. வெளிப்பூச்சுக்கும் புளி நல்ல மருந்து. அந்தக்  காலங்களில் ரத்தக் கட்டுக்கு புளிப்பற்று போடுவார்கள். அதேபோல தலைவலி, தோல்புண், வீக்கம் போன்றவற்றுக்கும் புளியைத் தடவினால் நிவாரணம் தரும்.  இத்தனை நல்ல குணங்கள் உள்ள புளியை ஒரு நாளைக்கு 10 கிராம் அளவுக்கு மேல் எடுக்கக் கூடாது. அந்த அளவு தாண்டினால், பேதி ஏற்படும்.
 
யாரெல்லாம் புளியை சேர்க்கக் கூடாது தெரியுமா?
 
இதய நோயாளிகள் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்வதால், அவர்களுக்கு புளி கூடாது. ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் மற்றும் ருமட்டாயிட் ஆர்த்ரைடிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கும் புளி வேண்டாம். அது அவர்களது ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களும் புளி  அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவார்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments