Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த பதிர் பேணி செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மைதா - 2 கப்,
அரிசி மாவு - 1/4 கப்,
நெய் - 1/2 கப்
சர்க்கரைத்தூள் - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
சோடா உப்பு - 1/2 டீஸ்பூன் 
செய்முறை:
 
மைதா, சோடா உப்பு, 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அரிசி மாவு, 1/2 கப் நெய் சேர்த்து நன்கு வெள்ளையாக நுரைத்து வரும்வரை குழைத்துக் கொள்ளவும். அதாவது இதனை பேஸ்ட் போல செய்துகொள்ளவும்.
 
மைதா மாவில் சிறு உருண்டை எடுத்து சிறிய சப்பாத்தியாக இட்டு, அதன் மேல் குழைத்த அரிசி மாவு கலவையை சிறிது எடுத்து தடவவும். இதே போல் 3 சப்பாத்திகள் செய்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, பிறகு அதனை சுருட்டவும். 
 
இதனை கத்தியால் 4-5 துண்டுகளாக நிதானமாக நறுக்கி, சிறு பூரிகளாக அழுத்தாமல் இடவும். கடாயில் எண்ணெயை மிதமான சூட்டில்  காயவைத்து நிதானமாக பொரித்தெடுத்து எண்ணெய்யை வடித்து ஒரு தட்டில் அடுக்கி சூடாக இருக்கும்போதே அதன் மேல் சர்க்கரைத்தூளை  தூவி விடவும். சுவையான பதிர் பேணி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments