Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுரேஷ் ரெய்னாவை கைவிட்ட சிஎஸ்கே!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (14:22 IST)
நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலம் வாங்க முன் வராததால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

 
இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்படும் போட்டி தொடராக உள்ளது. கடந்த ஆண்டு வரை ஐபிஎல்லில் 8 அணிகள் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.
 
உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன், மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரரும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ராபின் உத்தப்பாவை, அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கே சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் எடுத்து தக்க வைத்துள்ளது. 
 
இதேபோல் மேற்கு இந்திய வீரரான பிராவோவையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.4.40 கோடிக்கு தக்கவைத்துள்ளது. அதேநேரத்தில் சின்ன தல என்று அழைக்கப்படும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை என்பது ரெய்னா ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments