Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே தீபக் சாஹருக்கு கொரோனா ?

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (12:22 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளம் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று என தகவல். 

 
2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளம் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீரர் யார் என்ற தகவல் வெளியிடப்படாத நிலையில் தீபக் சாஹருக்கு கொரோனா என செய்திகள் தீயாய் கசிந்து வருகின்றன. 
 
அதோடு மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரெய்னா ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறிய நிலையில் கொரோனா சிஎஸ்கே அணியிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments