Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (13:32 IST)
நேற்றைய போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் டெல்லி அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

 
15 வது ஐபிஎல் திருவிழா இந்த ஆண்டு ஆண்டு இந்தியாவில் நடந்து வருகிறது. நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிராக லக்னோ அணி விளையாடியது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் ஜெயிண்ட் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பவுலிங் தேர்வு செய்தார்.
 
எனவே ரிஷப் பாண்டி தலைமையிலான டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், பிரித்வி ஷா 61 ரன்களும்,வார்னர் 4 ரன்களும், பண்ட் 39 ரன்களும், சர்பாஸ் ஆன் 36 ரன்களும், எடுத்தனர். எனவே டெல்லி அணி 20 ஓவர்களில் 3  விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்து   லக்னோ அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
 
இதையடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணியில், காக் 80 ரன்களும், ராகுல் 24 ரன்களும், பாண்ட்யா 19 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.  எனவே 19 .4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன் கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
 
இத்தொடரில் லக்னோ அணி தொடர்ச்சியாக 3 வது ஆட்டத்தில் வென்றுள்ளது. புள்ளிகள் பட்டியலிலும் 2 வது இடத்திற்கு அந்த அணி முன்னேறியது. டெல்லி அணி 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் டெல்லி அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  அணியின் கேப்டன் என்ற முறையில்  ரிஷப் பண்ட்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments