Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7000 mAh பவர் பேட்டரி.. வாடிக்கையான அம்சங்கள்..! - OPPO K13 5G எப்படி?

OPPO K13
Prasanth Karthick
திங்கள், 21 ஏப்ரல் 2025 (15:41 IST)

இந்தியாவில் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போ தனது புதிய OPPO K13 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான வரவேற்பு சிறப்பாக உள்ள நிலையில் அதிக சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றன. அவ்வாறாக தற்போது ஓப்போ நிறுவனம் புதிய OPPO K13 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

 

பொதுவாக ஸ்மார்ட்போன்கள் அதிகபட்சம் 6000 mAh பேட்டரி திறன் வரை உள்ள நிலையில் இந்த OPPO K13 5G ஸ்மார்ட்போனில் 7000 mAh பேட்டரி உள்ளது. இதனால் எளிதில் சார்ஜ் தீர்ந்து போகாமல் நீண்ட நேரம் பயன்படுத்தலாம் என்பது சிறப்பு

 

OPPO K13 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

 

6.67 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 6 ஜென்4 சிப்செட்

2.3 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்

டிஸ்ப்ளே பிங்கர் ப்ரிண்ட் சென்சார்

8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்

128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி

50 எம்பி + 2 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா

16 எம்பி முன்பக்க கேமரா

7000 mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்

 

இந்த OPPO K13 5G ஸ்மார்ட்போன் ஐசி பர்ப்பிள், பிரிஸம் ப்ளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது, இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.17,999 ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.19,999 ஆகவும் உள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments