Publish Date: Wed, 14 Oct 2026 (19:01 IST)
Updated Date: Wed, 14 Oct 2026 (19:05 IST)
சமீபகாலமாகவே செயற்கை நுண்ணறிவான AI மென்பொருள் துறையில் மிகவும் பிரபலமாகி விட்டது. மனிதர்களால் செய்யப்படும் ஒரு வேலையை AI மிகவும் வேகமாக செய்து விடுகிறது. எனவே மென்பொருள் துறையில் AI என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.
மென்பொருள் துறையில் AI தொடர்பான படிப்பை படித்தால்தான் எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்கிற நிலையும் உருவாகியிருக்கிறது. ஒருபக்கம் AI தொழில்நுட்பத்தால் மனிதர்கள் தங்கள் வேலைகளையும் இழந்து வருகிறார்கள். பல மென்பொருள் நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கம் செய்து வருகிறது. ஒருபக்கம் AI தொழில்நுட்பத்தால் மனிதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.. AI ரோபோக்கள் மனிதர்களுக்கு எதிராக மாறும் எனவும் சில மென்பொருள் வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த AMAZON நிறுவனர் ஜெப் பெசோஸ் AI வளர்ச்சியால் எதிர்காலத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்தாலும் குடும்பத்தை நடத்தும் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும். AI தொழில்நுட்பம் தொழிலாளர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும்.. இதன் மூலம் குடும்பத்தில் இரண்டு பேர் சம்பாதிக்கும் நிலை மாறி ஒருவர் வருமானமே போதும் என்கிற நிலை உருவாகும் என கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க