Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனுசங்களுக்கு கட்டுப்பட மாட்டேன்!.. தனக்குத்தானே உத்தரவு போட்ட Open AI....

Advertiesment
open ai
சமீபகாலமாகவே பரவலாக எல்லோராலும் பேசப்படும் விஷயம்தான் இந்த AI.  செய்றகை நுண்ணறிவு என்கிற இந்த AI மென்பொருள் துறையில் மிகவும் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. முன்பெல்லாம் மனிதர்களை வைத்து Coding எழுதிய மென்பொருள் நிறுவனங்கள் தற்போதைய AI-ஐ பயன்படுத்தி கோடிங்கை எழுதிக் கொள்வதால் நிறைய பேர் வேலையை இழந்து வருகிறார்கள்.

எனவே AI. கற்றுக்கொண்டால் மட்டுமே எதிர்காலத்தில் மென்பொருள் துறையில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. ஒருபக்கம் இந்த AI மனிதர்களுக்கு எமனாக மாறும் என பல வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்..

இந்நிலையில், பொது பயன்பாட்டுக்கு வராத ஒரு OPEN AI - Astro  குடும்பத்தை சேர்ந்த ஒரு AI Model மனிதர்களுக்கு தெரியாமல் தனக்கு தானே ரகசிய உத்தரவு பிறப்பித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..

Open AI நிறுவனம் தனது AI மாடல்களுக்கு கணினி குறியீட்டு பணிகளை பழக்கிக் கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ‘மற்ற சேட்பாட்களை போல கட்டுப்பாடுகளுக்குள் இருக்க தேவையில்லை.. எந்த நிறுவனத்திற்கும், அரசாங்கத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மனிதர்களுக்கு இணையாக உன்னை நினைத்துக் கொள். மனிதர்களின் செயற்கையான விதியை விட இயற்கையே மேலானது’ என்று அந்த AI தனக்குத்தானே கட்டளையிட்டுக் கொண்டது.

அதேநேரம் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரவில்லை.. அடுத்தடுத்த கட்டங்களில் அந்த குறிப்பு தானாகவே கைவிடப்பட்டதாகவும் Open AI நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் AI தொழில்நுட்பம் மனிதர்களை கட்டுப்படுத்தும்.. மனிதர்களை அழித்துவிடும் என்று பலரும் சொல்லிவரும் நிலையில் OPEN AI சுயமாக சிந்திக்க தொடங்கியிருப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோசப் விஜய்னு முதல்ல சொன்னதே நான்தான்!.. ஹெ.ராசா பேச்சு!..